< Back
தேசிய செய்திகள்
லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு
தேசிய செய்திகள்

லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு

தினத்தந்தி
|
18 Dec 2023 5:20 PM IST

லடாக்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் நகரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. பிற்பகல் 3.48 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

லடாக்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். ஆனாலும் இந்த நிலநடுக்கத்தால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என அரசு தெரிவித்துள்ளது.

இதைதொடர்ந்து கிஷ்த்வார் பகுதிகளில் பிற்பகல் 4.01 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. கிஷ்த்வாரில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

மேலும் செய்திகள்