< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அசுத்த நீரை குடித்த 54 பேருக்கு வாந்தி - மயக்கம்
|28 Jun 2023 2:00 AM IST
யாதகிரியில் அசுத்த நீரை குடித்த 54 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
யாதகிரி:
யாதகிரி மாவட்டம் குருமிட்கல் தாலுகாவில் இம்லாபுரா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 54 பேருக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் நடத்திய பரிசோதனையில் கிராமத்தில் வினியோகம் செய்யப்பட்ட அசுத்த நீரை குடித்ததால் அவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது தெரிந்தது. இதையடுத்து குடிநீர் மாதிரியை கைப்பற்றி ஆய்வுக்காக அவர்கள் அனுப்பி வைத்தனர். கிராம பஞ்சாயத்து சார்பில் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்பட்ட குடிநீரில், கழிவுநீர் கலந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.