அருணாச்சல பிரதேசத்தில் பிற்பகல் 3 மணி வரை 53 சதவீத வாக்குப்பதிவு
|அருணாச்சல பிரதேசத்தில் பிற்பகல் 3 மணி வரை 53 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இடாநகர்,
அருணாச்சலபிரதேசத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 60 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அருணாச்சலபிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க ஏற்கனவே பத்து இடங்களில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் மீதமுள்ள 50 சட்டசபை தொகுதிகள் மற்றும் 2 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் பிற்பகல் 3 மணி வரை 53 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அருணாச்சல பிரதேசத்தில் ஒரு சில வாக்குச் சாவடிகளில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் காலையில் வாக்குப்பதிவு தாமதமானதாகவும், பின்னர் இயந்திரங்கள் மாற்றப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி பவன் குமார் சைன் தெரிவித்தார்.
அருணாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 2ம் தேதியும், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.