< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டில் இந்த ஆண்டு 52,191 வழக்குகள் முடித்து வைப்பு
|22 Dec 2023 4:16 AM IST
தொழில்நுட்ப உதவியுடன் விரைவாக வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில் 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் டிசம்பர் 15-ந்தேதி வரை மொத்தம் 49,191 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே சமயம், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் 52,191 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்பத்தை திறம்பட உபயோகித்ததன் மூலம் விரைவாக வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆன்லைன் வழக்குப்பதிவு, காணொலி காட்சி மூலம் விசாரணை, டிஜிட்டல் ஆவணப்பதிவு ஆகியவற்றின் பயன்பாடு காரணமாக விரைவாக நீதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.