< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மேகலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு
|2 Oct 2023 9:10 PM IST
மேகலயா மாநிலத்தில் இன்று மாலை 6.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகலயாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது. இன்று மாலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சில பகுதிகள், மேற்கு வங்காளம், சிக்கிம் மாநிலத்தின் ஒரு சில பகுதிகளிலும் உணரப்பட்டது.