< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சென்னையில் ஏழுமலையான் கோவில் விரிவாக்கத்திற்கு நிலம் வாங்க திருப்பதி தேவஸ்தான குழுவிடம் ரூ.5.11 கோடி ஒப்படைப்பு..!
|7 Aug 2023 11:21 PM IST
சென்னையில் உள்ள ஏழுமலையான் கோவில் விரிவாக்கத்திற்கு நிலம் வாங்க 5 கோடியே 11 லட்சம் ரூபாய் நன்கொடைத் தொகை திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்படைக்கப்பட்டது.
திருப்பதி,
சென்னையில் உள்ள ஏழுமலையான் கோவில் விரிவாக்கத்திற்கு நிலம் வாங்க 5 கோடியே 11 லட்சம் ரூபாய் நன்கொடைத் தொகை திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை தியாகராய நகரில் உள்ள ஏழுமலையான் கோவில் பணிகளுக்காக இதுவரை எட்டு கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனியார்கள் உட்பட 9 பேர் 5 கோடியே 11 லட்ச ரூபாய் நன்கொடையை தேவஸ்தானத்தின் சென்னை, பாண்டிச்சேரி பிராந்திய திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலோசனை குழுவிடம் வழங்கினர்.
இதையடுத்து திருப்பதியில் நடைபெற்ற தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில், சென்னை, பாண்டிச்சேரி பிராந்திய திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலோசனை குழு தலைவர் சேகர ரெட்டி தலைமையிலான அறங்காவலர் குழு, 5 கோடியே 11 லட்சம் ரூபாயை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டியிடம் ஒப்படைத்தனர்.