< Back
தேசிய செய்திகள்
நவி மும்பையில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
தேசிய செய்திகள்

நவி மும்பையில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

தினத்தந்தி
|
14 Nov 2023 3:15 PM IST

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

நவி மும்பையில் ஒரு நபர் தனது உறுவினரின் 5 வயது மகளை இனிப்பு கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமி பெற்றோருடன் பன்வெல் கிராமத்தில் வசித்து வருகிறார். குற்றம்சாட்டப்பட்ட நபர் நவி மும்பை வாஷி பகுதியில் வசித்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12-ம் தேதி குற்றம்சாட்டப்பட்ட நபர், சிறுமிக்கு இனிப்பு கொடுப்பதாக கூறி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் குற்றவாளியை போலீசார் நேற்று கைது செய்தனர். உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு குற்றவாளியை வருகிற 18-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்