< Back
தேசிய செய்திகள்
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

தினத்தந்தி
|
13 May 2023 6:40 AM IST

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் பர்பானி மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சோன்பெத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பௌச்சா தாண்டா பகுதியில் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

அதிகாரியின் கூற்றுப்படி, வியாழக்கிழமை மதியம் ஒரு பண்ணையில் அமைந்துள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக ஆறு தொழிலாளர்கள் தொட்டிக்குள் இறங்கினர். தொட்டியை சுத்தம் செய்யும் போது அவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால்ம் அங்கு 5 தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்றொரு தொழிலாளியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து சோன்பெத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்