< Back
தேசிய செய்திகள்
ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

தினத்தந்தி
|
17 Nov 2023 12:40 PM IST

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் 5 பேரும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் குளிர் காலம் தொடங்கியுள்ள நிலையில், அங்கு பயங்கரவாதிகளின் ஊடுருவல்கள் அதிகரிக்கலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் 5 பேரும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தொடந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்