< Back
தேசிய செய்திகள்
ஆந்திராவில் 5 ரூபாய் உணவகம் திறப்பு
தேசிய செய்திகள்

ஆந்திராவில் 5 ரூபாய் உணவகம் திறப்பு

தினத்தந்தி
|
15 Aug 2024 6:18 PM IST

அண்ணா கேண்டீன்கள் திறக்கப்படும் என சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்து இருந்தார்.

ஐதராபாத்,

ஆந்திரா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்து சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரியாகி உள்ளார்.

இந்தநிலையில் அவர் தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அண்ணா கேண்டின்கள் திறக்கப்படும் என சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி இன்று ஆந்திராவில் உள்ள 14 மாவட்டங்களில் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்பட்டது.

காலை, மதியம், இரவு என 3 வேளையும் 5 ரூபாய்க்கு அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. தினமும் ஒரு லட்சம் பேர் உணவு சாப்பிடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். உணவு தரம் சுவையாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பல இடங்களில் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்படும் என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்