< Back
தேசிய செய்திகள்
திருட்டு வழக்குகளில் 5 பேர் சிக்கினர்; இருசக்கர வாகனங்கள், நகை-பணம் மீட்பு
தேசிய செய்திகள்

திருட்டு வழக்குகளில் 5 பேர் சிக்கினர்; இருசக்கர வாகனங்கள், நகை-பணம் மீட்பு

தினத்தந்தி
|
8 Sept 2022 9:45 PM IST

உப்பள்ளியில் திருட்டு வழக்குகளில் 5 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்கள், நகை-பணம் மீட்கப்பட்டது.

உப்பள்ளி;


தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிள்களில் சுற்றித்திரிந்த 5 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ஆனந்த நகர் பகுதியை சோ்ந்த மஞ்சுநாத் (வயது 40) உள்பட 5 பேர் என்பதும், அவர்கள் உப்பள்ளி, தார்வார், பெலகாவி போன்ற பகுதிகளில் உள்ள வீடுகள், கோவில்கள் மற்றும் வீடுகளின் வாசலில் நிறுத்தப்பட்டு இருக்கும் இருசக்கர வாகனங்களை திருடிவந்ததும் தெரியவந்தது.

இவர்கள் மீது உப்பள்ளி வித்யாநகர், அசோக் நகர், தார்வார் உபநகர், பெலகாவியில் 9 வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 4 இருசக்கர வாகனங்கள், ரூ.1½ லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் ரூ.12 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும் செய்திகள்