ஜம்மு காஷ்மீரில் பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கைது
|பயங்கர ஆயுதங்களுடன் இருந்த 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஜம்மு,
காஷ்மீரின் சம்பா மாவட்டத்துக்கு உட்பட்ட ராம்கர் பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கே மறைந்திருந்த விவேக் சிங் என்ற பயங்கர ரவுடி போலீசாரிடம் சிக்கினார்.
அவரை சோதனையிட்டபோது அவரிடம் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் சில ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவற்றை பறிமுதல் செய்த போலீசார் விவேக் சிங்கையும் கைது செய்தனர். கடந்த 2018-ம் ஆண்டு கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கில் இவர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அங்குள்ள மண்டல் பகுதியில் சுரங்க மாபியாக்களிடம் இருந்து ஒரு கும்பல் மாமூல் பெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கே விரைந்து சென்ற போலீசார் அந்த பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் இருந்த 4 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக போலீசார் தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.