< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அமித்ஷா போலி வீடியோ விவகாரம் தொடர்பாக 5 பேர் கைது
|4 May 2024 3:25 AM IST
காங்கிரஸ் தொண்டர்கள் 5 பேரை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெலுங்கானாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியபோது, எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என பேசியதாக கூறி போலி வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த புகாரின் பேரில் டெல்லி சைபர் பிரிவு போலீசார் மற்றும் தெலுங்கானா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அமித்ஷா போலி வீடியோ விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தொண்டர்கள் 5 பேரை ஐதராபாத் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோர்ட்டு அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது.