< Back
தேசிய செய்திகள்
ரூ.6 லட்சம் பறித்த வழக்கில் 5 பேர் கைது
தேசிய செய்திகள்

ரூ.6 லட்சம் பறித்த வழக்கில் 5 பேர் கைது

தினத்தந்தி
|
4 Aug 2023 3:26 AM IST

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.6 லட்சம் பறித்த வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மைசூரு:-

ரூ.6 லட்சம் கொள்ளை

மைசூரு மாவட்டம் ஹெப்பால் பகுதியை சேர்ந்தவர் துளசிதாஸ். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி துளசிதாஸ், தனியார் நிறுவனத்தில் உள்ள பணத்தை செலுத்துவதற்காக ஹெப்பால் பகுதியில் உள்ள வங்கிக்கு கைப்பையில் ரூ.6 லட்சத்தை எடுத்து கொண்டு ஆட்டோவில் சென்றார். அவர் வங்கி முன்பு இறங்கினார்.

அங்கு நின்ற நபரிடம் துளசிதாஸ் பேசி கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் துளசிதாஸ் முகத்தில் மிளகாய் பொடியை வீசி கைப்பையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ஹெப்பால் போலீசில் துளசிதாஸ் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.6 லட்சம் கொள்ளை அடித்த வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

5 பேர் கைது அவர்களிடம் நடத்தியவிசாரணையில், அவர்கள் பெங்களூருவை சேர்ந்த சூரஜ், மைசூரு மாதேஸ்வரா லே-அவுட் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாஸ், பைரவேஸ்வரா பகுதியை சேர்ந்த அரவிந்த், கிரண் மற்றும் உன்சூரை சேர்ந்த கிரண்குமார் ஆகியோர் ஆகும்.கோலார் மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்ததுஅவர்களிடம் இருந்து. ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள், 5 பேரும் மைசூரு ஹெப்பால் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த சில நாட்களாக துளசிதாஸ் ஹெப்பால் பகுதியில் உள்ள வங்கிக்கு பணம் செலுத்த வருவதை நோட்டுமிட்டுள்ளனர்.

சிறையில் அடைத்தனர்

இதேப்போல் சம்பவத்தன்று துளசிதாஸ் வங்கிக்கு பணம் செலுத்த வந்தபோது அவரிடம் இருந்த ரூ.6 லட்சத்தை அவர்கள் திருடி சென்றுள்ளனர். மேலும் அவர்கள் 5 பேரும் அப்பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்்தது. பின்னர் சூரஜ் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் மைசூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்