< Back
தேசிய செய்திகள்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பொற்கோவில் அருகே மர்மபொருள் வெடித்த சம்பவத்தில் 5 பேர் கைது
தேசிய செய்திகள்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பொற்கோவில் அருகே மர்மபொருள் வெடித்த சம்பவத்தில் 5 பேர் கைது

தினத்தந்தி
|
11 May 2023 10:20 AM IST

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பொற்கோவில் அருகே மர்மபொருள் வெடித்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் அருகே நேற்று நள்ளிரவு 12 மணியவில் மீண்டும் மர்ம பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. தகவலறிந்து போலீஸ் கமிஷனர் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் பஞ்சாப் போலீசார் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து தடயவியல் மாதிரிகளை சேகரித்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பில் சம்பவத்தில், துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு மர்ம பொருள் வெடித்ததில் சில கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இதில் ஒருவர் காயமடைந்தது. பொற்கோவிலுக்கு அருகே அடுத்தடுத்து மர்ம பொருட்கள் வெடித்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்