< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உத்தரப் பிரதேசம்: வீட்டில் பயங்கர தீ விபத்து - 5 பேர் உயிரிழப்பு
|28 Dec 2022 6:40 AM IST
உத்தரப் பிரதேசம் மௌ மாவட்டத்தில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர்.
மௌ (உத்தரப் பிரதேசம்),
உத்தரபிரதேச மாநிலம் மௌவில் உள்ள ஷாப்பூர் கிராமத்தில் உள்ள வீட்டில் தீப்பிடித்ததில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர், அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் அருண் குமார் கூறும்போது, "மௌ மாவட்டத்தில் உள்ள ஷாப்பூர் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் மற்றும் 3 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். முதல் கட்ட விசாரணையில் அடுப்பிலிருந்து தீ பரவியதாக தெரிய வந்துள்ளது என்று கூறினார்.
மேலும் ஒரு நபருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவியும் அவர் அறிவித்தார்.