< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இமாசலபிரதேசத்தில் சாலை விபத்தில் 5 பேர் பலி
|3 Nov 2023 11:56 PM IST
பயங்கர சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டதுடன், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மண்டி,
இமாசல பிரதேசத்தின் மண்டி மாவட்டம் கர்சாக்-சிம்லா சாலையில் ஒரு வாகனம் சென்று கொண்டிருந்தது. அல்சிண்டி கிராம பகுதி அருகே வந்தபோது அந்த வாகனம் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் பாய்ந்தது.
பயங்கர சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டதுடன், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரின் மீட்பு பணியில் வாகனத்தில் இருந்த 5 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் பற்றிய தெரியவில்லை. விபத்தில் சிக்கியவர்கள் பற்றிய விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.