< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் பயணித்த கார் தடுப்பு சுவரில் மோதி கோர விபத்து - 5 பேர் பலி
|22 April 2024 3:00 PM IST
திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் பயணித்த கார் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த 8 பேர் பீகார் மாநிலம் டியோரியாவில் நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று அதிகாலை காரில் சென்றனர்.
டெல்லி - ஆக்ரா இடையேயான யமுனா தேசிய நெடுஞ்சாலையில் எட்மட்பூர் பகுதியில் அதிகாலை சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் அதிவேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். டிரைவர் மதுபோதையில் கார் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.