< Back
தேசிய செய்திகள்
தெலுங்கானாவில் கண்ணாடி தொழிற்சாலையில் வெடிவிபத்து; 5 பேர் பலி
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் கண்ணாடி தொழிற்சாலையில் வெடிவிபத்து; 5 பேர் பலி

தினத்தந்தி
|
29 Jun 2024 10:43 AM IST

கண்ணாடி தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ஷாட்நகர் பகுதியில் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. நேற்று மாலை இந்த தொழிற்சாலை வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. தொழிலாளர்கள் கண்ணாடி தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து நேரிட்டது. இந்த கோர விபத்தில் தொழிலாளர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும் 15 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்