< Back
தேசிய செய்திகள்
அரியானாவில் குருகிராமில்  கோயில் சுவர் இடிந்து விழுந்து விபத்து
தேசிய செய்திகள்

அரியானாவில் குருகிராமில் கோயில் சுவர் இடிந்து விழுந்து விபத்து

தினத்தந்தி
|
25 Dec 2023 7:02 PM IST

கோயிலில் ஏற்பட்ட இடிபாடுகளில் 5 தொழிலாளர்கள் சிக்கினர்.

குருகிராம்,

அரியானாவில் உள்ள கோயிலின் சுவர் இடிந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஜெகநாதர் கோயில் சுவர் இடிந்து விபத்துக்குள்ளானது.

இதனால் ஏற்பட்ட இடிபாடுகளில் 5 தொழிலாளர்கள் சிக்கினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், முதற்கட்டமாக ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 4 பேரையும் மீட்புக்குழுவினர் மீட்டனர். இந்த 5 பேரில் 4 பேர் நலமுடன் இருப்பதாகவும் ஒருவர் மட்டும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்