< Back
தேசிய செய்திகள்
பா.ஜ.க. நிர்வாகி மீதான வழக்கில் கவனக்குறைவு: 5 போலீசார் பணியிடை நீக்கம்
தேசிய செய்திகள்

பா.ஜ.க. நிர்வாகி மீதான வழக்கில் கவனக்குறைவு: 5 போலீசார் பணியிடை நீக்கம்

தினத்தந்தி
|
11 Sept 2023 1:42 AM IST

பா.ஜ.க. நிர்வாகி மீதான வழக்கில் கவனக்குறைவாக செயல்பட்டதாக 5 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் மகாராஜ்கன்ஜ் மாவட்டத்தை சேர்ந்தவர் மசூம் ராசா ரகி. பா.ஜ.க. நிர்வாகியான இவர் மாவட்ட சிறுபான்மையின தலைவராகவும் இருந்து வருகிறார். இந்தநிலையில் கடந்த மாதம் 17 வயது சிறுமி ஒருவரை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு ராசா உள்ளாக்கினார். மேலும் அதனை தட்டிக்கேட்ட சிறுமியின் தந்தையை கண்மூடித்தனமாக அடித்து உதைத்தார். படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிர் இழந்தார்.

இதுகுறித்து போலீசிடம் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் ஒன்றை கொடுத்தார். அதன்பேரில் போலீசார் ராசா மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். நீதிபதி விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமி குற்றச்சாட்டுகளை திரும்ப பெறுவதாக சாட்சியம் கொடுத்தார். அதன்பேரில் நிபந்தனைகளுடன் ராசா விடுவிக்கப்பட்டார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ராசா திடீரென தலைமறைவானார்.

இதனால் வழக்கில் கவனக்குறைவாகவும் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக கூறி ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீஸ்காரர்களை மாநில போலீஸ் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் 14 போலீஸ்காரர்கள் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தலைமறைவான ராசாவை போலீசார் வலைவீசி தேடுகிறார்கள்.

மேலும் செய்திகள்