< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மத்தியபிரதேசத்தில் ஆற்றில் மூழ்கி 5 சிறுவர்கள் பலி
|19 Oct 2022 5:04 AM IST
மத்தியபிரதேசத்தில் ஆற்றில் மூழ்கி 5 சிறுவர்கள் பலியாகினர்.
போபால், அக்.19-
மத்தியபிரதேச மாநிலம் கத்னி மாவட்டத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள், நேற்று முன்தினம் மாலை அங்குள்ள ஆற்றில் குளிக்கச்சென்றனர்.13 முதல் 15 வயது வரையுள்ள அந்த சிறுவர்கள் நெடுநேரம் வீடு திரும்பவில்லை. அதனால் கவலை அடைந்த பெற்றோர்கள், அவர்களை தேடத்தொடங்கினர்.ஆற்றங்கரை ஓரம் தங்கள் மகன்களின் ஆடைகள் கிடப்பதை பார்த்த அவர்கள், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், மாநில அவசரகால மீட்புப் படையினரும் ஆற்றில் தேடுதலில் ஈடுபட்டனர். அதில் சிறுவர்கள் 5 பேரின் உடல்களும் நேற்று காலை மீட்கப்பட்டன.
ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.