< Back
தேசிய செய்திகள்
மராட்டியத்தில் சட்டவிரோதமாக வசித்துவந்த வங்காளதேசத்தினர் 5 பேர் கைது
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் சட்டவிரோதமாக வசித்துவந்த வங்காளதேசத்தினர் 5 பேர் கைது

தினத்தந்தி
|
24 Sept 2024 1:31 PM IST

மராட்டியத்தில் சட்டவிரோதமாக வசித்துவந்த வங்காளதேசத்தினர் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடும்பமாக நுழையும் நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்று பெயர், அடையாள அட்டையுடன் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். அந்த நபர்களை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், மராட்டிய மாநிலத்தின் பகல்ஹர் மாவட்டம் நல சோப்ரா பகுதியில் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக வசித்துவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, நல சோப்ரா பகுதியில் உரிய ஆவணமும் இன்றி சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் கடந்த 10 ஆண்டுகளுக்குமுன் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர்.

இதையடுத்து உரிய ஆவண இன்றி இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்காளதேசத்தினர் 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட 5 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்