< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இந்தியாவில் புதிதாக 47 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
|30 Jun 2023 1:37 AM IST
கொரோனா தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 30 குறைந்தது.
புதுடெல்லி,
இந்தியாவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 100-க்குள் அடங்கி வருகிறது. நேற்றுமுன்தினம் 65 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதுவரை கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணக்கை 4 கோடியே 49 லட்சத்து 94 ஆயிரத்து 144 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று கொரோனா தொற்றில் இருந்து 77 பேர் மீண்டனர். இதுவரை இந்தத் தொற்றில் இருந்து மீண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 60 ஆயிரத்து 690 ஆக அதிகரித்துள்ளது. நேற்று தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 30 குறைந்தது. இதன் காரணமாக தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,549 ஆகக் குறைந்துள்ளது. தொற்றால் நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை. இதனால் தொற்றுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 905 ஆக நீடிக்கிறது.