< Back
தேசிய செய்திகள்
தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் உள்பட 46 பேருக்கு நல்லாசிரியர் விருது
தேசிய செய்திகள்

தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் உள்பட 46 பேருக்கு நல்லாசிரியர் விருது

தினத்தந்தி
|
5 Sept 2022 12:45 PM IST

தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் உள்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

புதுடெல்லி,

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 5) ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரை கவுரவிக்கும் வகையில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தாண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன், புதுச்சேரியை சேர்ந்த அரவிந்த்ராஜா உள்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்வு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் பள்ளி சீருடை அணிந்து வந்து நல்லாசிரியர் விருதை பெற்றுக்கொண்டார். இவர், ராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பல் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை கலந்துரையாடுகிறார். மாலை 4:30 மணிக்கு லோக் கல்யாண் மார்க்கில், தேசிய விருதுகள் பெற்றவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

மேலும் செய்திகள்