< Back
தேசிய செய்திகள்
சூதாட்டத்தில் ஈடுபட்ட 44 பேர் கைது; ரூ.5¾ லட்சம் பறிமுதல்
தேசிய செய்திகள்

சூதாட்டத்தில் ஈடுபட்ட 44 பேர் கைது; ரூ.5¾ லட்சம் பறிமுதல்

தினத்தந்தி
|
26 Sept 2022 11:30 AM IST

சிக்கமகளூருவில் வெவ்வேறு இடங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 44 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.5¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா ஜெயப்புரா பகுதியில் தனியார் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடப்பதாக ஜெயப்புரா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்த 35 பேரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5.54 லட்சம் ரொக்கம், 35 செல்போன்கள், 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், சிக்கமகளூரு டவுன் மதுவன லே-அவுட் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அதேப்பகுதியை சேர்ந்த ராகில், அசைன்கான், இம்தியாஸ், முகமது ரசூல், நயாஜ் உள்பட 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து ஜெயப்புரா மற்றும் சிக்கமகளூரு டவுன் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்