< Back
தேசிய செய்திகள்
Ladakh Earthquake
தேசிய செய்திகள்

லடாக் பகுதியில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

தினத்தந்தி
|
3 July 2024 11:08 AM IST

இன்று காலை 8.12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஸ்ரீநகர்,

லடாக்கில் உள்ள லே பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.12 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

லேவில் 150 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்