< Back
தேசிய செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் ரூ.4.34 கோடி உண்டியல் காணிக்கை
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் ரூ.4.34 கோடி உண்டியல் காணிக்கை

தினத்தந்தி
|
3 July 2022 11:28 PM IST

வார விடுமுறை என்பதால் நேற்றும் இன்றும் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருப்பதி,

கோடை விடுமுறையையொட்டி கடந்த மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோடை விடுமுறை முடிவடைந்த நிலையிலும் ஏழுமலையானை தரிசிக்கும் பக்தரகளின் கூட்டம் குறையவில்லை.

இந்நிலையில் வார விடுமுறை என்பதால் நேற்றும் இன்றும் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இலவச தரிசனத்திற்காக 15 மணி நேரமும், சிறப்பு தரிசனத்திற்காக 5 மணி நேரமும் பக்தர்கள் காத்திருந்தனர்.

இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 88 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்தனர். மேலும் உண்டியல் காணிக்கையாக நேற்று ஒரே நாளில் 4 கோடியே 34 லட்சம் ரூபாய் கிடைக்கப் பெற்றதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்