< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அசாம் - திரிபுரா எல்லையில் லாரியில் 400 கிலோ கஞ்சா பறிமுதல்: டிரைவர் கைது
|6 Dec 2022 8:55 AM IST
லாரியின் ரகசிய அறையில் 400 கிலோ கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
கரீம்கஞ்ச்,
அசாம்-திரிபுரா எல்லையை ஒட்டிய கரீம்கஞ்ச் மாவட்டத்தில் டிரக்கில் இருந்து 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை அசாம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இரகசிய தகவலின் அடிப்படையில், போலீசார் சுரைபரி கண்காணிப்புச் சாவடியின் ஒரு லாரியை இடைமறித்தனர். அப்போது அந்த லாரியை சோதனை செய்ததில், லாரியின் உள்ளே ஒரு ரகசிய அறையில் இருந்து 400 கிலோ கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து லாரி டிரைவரை கைது செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு சுமார் ரூ. 40 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக அக்டோபர் 17 ஆம் தேதி, சுரைபாரி பகுதியில் ரூ. 3.30 கோடி மதிப்புள்ள 3,243 கிலோ போதைப்பொருளை போலீஸார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.