< Back
தேசிய செய்திகள்
வெங்காயத்திற்கு 40 சதவீதம் ஏற்றுமதி வரி விதிப்பு - மத்திய அரசு
தேசிய செய்திகள்

வெங்காயத்திற்கு 40 சதவீதம் ஏற்றுமதி வரி விதிப்பு - மத்திய அரசு

தினத்தந்தி
|
19 Aug 2023 8:23 PM IST

ஏற்றுமதி வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

வெங்காயம் மீதான ஏற்றுமதி வரியை 40 சதவீதம் ஆக விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே வெங்காயத்தின் விலை அதிகரித்து வந்தது.

செப்டம்பரில் வெங்காயம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ,உள்நாட்டில் வெங்காய விநியோகத்தை மேம்படுத்துவதற்காகவும் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்காயம் மீதான இந்த ஏற்றுமதி வரி விதிப்பு வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் செய்திகள்