< Back
தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்
டேங்கர் லாரிக்குள் கடத்தப்பட்ட 40 மாடுகள்.. துடிதுடித்து உயிரை விட்ட சோகம்

5 July 2023 2:34 AM IST
இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
கவுகாத்தி,
அசாமின் கவுகாத்தியில் சோனாபூர் அருகே டேங்கர் லாரியில் கடத்தப்பட்ட 40 கால்நடைகளை போலீஸார் மீட்டுள்ளனர். மாடுகளை புதிய வழியில், டேங்கர் லாரியில் கடத்தியிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
மேகாலயாவுக்கு மாடுகள் கடத்தப்பட்ட நிலையில், அதனை மீட்ட போது, கால்நடைகள் ஆபத்தான நிலையில் இருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். 11 மாடுகள் இறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.