< Back
தேசிய செய்திகள்
காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் கைது

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் கைது

தினத்தந்தி
|
17 Nov 2022 12:34 AM IST

காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் எதிர்ப்பு முன்னணி என்ற பெயரில் பயங்கரவாத அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் சமீபத்தில் நடந்த கையெறி குண்டு தாக்குதலில் இந்த அமைப்பின் தொடர்பு இருப்பது தெரியவந்தது. எனவே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடி வந்தனர்.

இதன் பயனாக தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் எதிர்ப்பு முன்னணி அமைப்புடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததும், அந்த அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு உதவிகரமாக இருந்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த 4 பேரிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ள அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்