< Back
தேசிய செய்திகள்
லடாக்: வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் 4 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு..!
தேசிய செய்திகள்

லடாக்: வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் 4 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு..!

தினத்தந்தி
|
18 Oct 2022 7:12 PM GMT

லடாக்கில் சுற்றுலா வாகனம் 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

லே,

லடாக்கின் லே பகுதியில் சுற்றுலா வாகனம் 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

இறந்தவர்கள் டெல்லியைச் சேர்ந்த முகமது ஃபிரோஸ், ரியாஸ் அகமது மற்றும் அசம் கான் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஜீஷன் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கர்துங்லா உச்சியில் பனிப்பொழிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக லே, போலீஸ் சூப்பிரண்டு பி டி நித்யா தெரிவித்தார். லே நகரம் தவிர கர்துங்லா கணவாய், சங்லா கணவாய் மற்றும் லடாக்கின் பிற மேல் பகுதிகளில் பகலில் பனிப்பொழிவு ஏற்பட்டது.

மற்றொரு சம்பவத்தில், லிங்ஷெட் பகுதியில் உள்ள சிங்கய்லா என்ற இடத்தில், கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள் வாகனம் சாலையில் இருந்து கீழே விழுந்ததில் காயமடைந்ததாக அதிகாரி கூறினார். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கல்சியில் உள்ள பிளாக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக அவர் கூறினார்,

சீரற்ற காலநிலையைக் கருத்தில் கொண்டு மக்கள் குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் நுப்ரா, பாங்கோங் மற்றும் பிற உயரமான பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்