< Back
தேசிய செய்திகள்
மம்தா பானர்ஜியின் முகத்தில் 4 தையல்கள்; உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்

Image Courtesy : ANI

தேசிய செய்திகள்

மம்தா பானர்ஜியின் முகத்தில் 4 தையல்கள்; உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்

தினத்தந்தி
|
15 March 2024 2:35 PM IST

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மம்தா பானர்ஜி தற்போது வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார்.

கொல்கத்தா,

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நெற்றியில் ரத்தம் வழிகிற நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.

முதலில் அவருக்கு எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், பின்னர் அங்கிருந்து அவர் இன்ஸ்டிடியூட் ஆப் நியூரோ சயின்சஸ்-க்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு மம்தா பானர்ஜி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

தற்போது வீட்டில் இருந்தபடி மம்தா பானர்ஜி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது முகத்தில் 4 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக மம்தா பானர்ஜி அவரது வீட்டில் உள்ள அலமாரியின் மீது மோதியதில் அவருக்கு தலையில் வெட்டு காயம் ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்