< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நின்றுகொண்டிருந்த பஸ் மீது பின்னால் வந்த பஸ் மோதி விபத்து - 4 பேர் பலி
|21 Nov 2023 7:03 PM IST
டஹொட் - கோத்ரா நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது.
காந்திநகர்,
குஜராத் மாநிலத்தில் இருந்து மத்தியபிரதேசத்தின் இந்தூருக்கு இன்று அதிகாலை பஸ் சென்றுகொண்டிருந்தது. டஹொட் - கோத்ரா நெடுஞ்சாலையில் சென்றபோது பஸ்சில் பழுது ஏற்பட்டது.
இதனால், நெடுஞ்சாலையோரம் பஸ்சை நிறுத்தி பழுது சரிசெய்துகொண்டிருந்தனர். அப்போது, டஹொட் பகுதியில் இருந்து வேகமாக வந்த சொகுசு பஸ் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பழுதான பஸ் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 11 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.