< Back
தேசிய செய்திகள்
கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்
தேசிய செய்திகள்

கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்

தினத்தந்தி
|
28 Jun 2022 9:19 PM IST

சிவமொக்காவில் கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவமொக்கா;

சிவமொக்கா டவுன் ஊர்கடூர் அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசார் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது 4 வாலிபர்கள் கையில் பையுடன் நின்றிருந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து பையை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் கஞ்சா பொட்டலம் இருந்தது. இது தொடர்பாக வாலிபர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் சிவமொக்கா டவுன் புத்தாநகர் பகுதியை சேர்ந்த திலக் (வயது 23), முகமது கவுஸ் (21), கோட்டேஹாலை சேர்ந்த மஞ்சுநாத் (20), பத்ராவதியை சேர்ந்த சுமன் (23) என்று தெரியவந்தது.

இவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து இங்குள்ள இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.30 ஆயிரம் இருக்கும். இதுகுறித்து சிவமொக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்