தமிழகத்தை சேர்ந்த 4 பேர் ஆந்திராவில் பலி
|கிருஷ்ணா மாவட்டம் பாப்புலபாடு தேசிய நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
ஐதராபாத்,
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், பாப்புலபாடு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை, லாரி மீது அதிவேகத்தில் வந்த கார் ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த 4 பேரும் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம் நல்லம்மநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சத்யா என்ற பெண், விஜயவாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவின் கொவ்வூரில் இருந்து தமிழகத்திற்கு காரில் சென்றபோது இந்த சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இறந்தவர்கள் விவரம்: சுவாமிநாதன் (40), ராகேஷ் (12), ராதாபிரியா (14), கோபி (23) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சத்யா (28) (சுவாமிநாதனின் மனைவி) பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.