< Back
தேசிய செய்திகள்
இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் மீனவர்கள் கைது
தேசிய செய்திகள்

இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் மீனவர்கள் கைது

தினத்தந்தி
|
7 July 2022 8:20 PM IST

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் நாட்டு மீனவர்கள் 4 பேரை இந்திய கடற்படை கைது செய்துள்ளது.

அரபிக்கடலில் மீன் பிடிக்கும் செல்லும் இந்தியர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்வதும், பாகிஸ்தான் மீனவர்களை இந்திய கடற்படை கைது செய்வதும் அடிக்கடி நடைபெறும் நிகழ்வாக உள்ளது. அந்த வகையில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் நாட்டு மீனவர்கள் 4 பேரை இந்திய கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் 15 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குஜராத்தின் கட்ச் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

அரபிக்கடலில் உள்ள 1165 மற்றும் 1166 எல்லை தூண்கள் பகுதியில், பாகிஸ்தானை சேர்ந்த மீன் பிடி படகுகள் நடமாட்டம் இருப்பதை எல்லை பாதுகாப்பு படை கவனித்தது. இதையடுத்து, குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய மீனவர்களை கைது செய்தது. பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகளை ஆய்வு செய்ததில் சந்தேகத்திற்கிடமாக எந்த ஒரு பொருளும் கிடைக்கவில்லை என்று பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்