கஞ்சா வியாபாரி கொலையில் மேலும் 4 பேர் கைது
|கஞ்சா வியாபாரி கொலையில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வாலை சேர்ந்தவர் முகமது சாவந்த். கஞ்சா வியாபாரியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ேபாலீசார் பண்ட்வாலை சேர்ந்த ரிஸ்வான் மற்றும் ஜைனுல்லா ஆகிய 2 பேரை கைது செய்தனர். விசாரணையில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் முகமது சாவந்த் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் முகமது சாவந்த் கொலை வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் பண்ட்வாைல சேர்ந்த தாவுத் அமீர் (வயது 25), அப்ரிடி (23), அப்துல் ரகிஜ் (23) மற்றும் முகமது இர்ஷாத் என்பது தெரியவந்தது. இதன்மூலம் கஞ்சா வியாபாரி கொலை வழக்கில் கைது எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.