மத்தியப்பிரதேசத்தில் தெருநாய்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் - போலீசார் விசாரணை
|மத்தியப்பிரதேசத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 4 பேர் தெரு நாய்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர்.
இந்தூர்,
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 4 பேர் தெரு நாய்கள் மீது ஏர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடையாளம் தெரியாத நபர்கள் தெரு நாய்களை துப்பாக்கியால் சுடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், துப்பாக்கிச் சூட்டில் நாய்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் குற்றவாளிகளை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் விஷ்ணுபுரி பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு குறித்து உள்ளூர்வாசிகள் தமக்கு தகவல் தெரிவித்ததாக 'பீப்பிள் பார் அனிமல்ஸ்' அமைப்பின் இந்தூர் பிரிவு தலைவர் பிரியான்ஷு ஜெயின் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் ஏதேனும் நாய்கள் காயம் அடைந்துள்ளதா என்பதை அறிய அந்த அமைப்பின் செயற்பாட்டாளர்கள் முயற்சித்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.