< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பஞ்சாப் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையே துப்பாக்கி சூடு; 4 பேர் பலி
|8 July 2024 3:03 PM IST
பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சண்டிகார்,
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் பழைய போட்டி மற்றும் பிரச்சினை காரணமாக இரு பிரிவினருக்கு இடையே துப்பாக்கி சூடு ஏற்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் நேற்று இரவு படாலாவின் வித்வான் கிராமத்தில் நடந்ததாகவும், இரு பிரிவினர்களிலும் மொத்தம் 13 பேர் இருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் ஒவ்வொரு குழுவையும் சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 8 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.