உத்தரபிரதேசம்: மினி வேன் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழப்பு
|படுகாயம் அடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் இருந்து நேற்று இரவு, 10 பயணிகளுடன் மினி வேன் ஜலான் மாவட்டத்தில் உள்ள கைத்தேரி சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்து. அதே சமயத்தில் சாலையின் எதிர்புறம் வந்து கொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மினி வேன் மீது அதிவேகமாக மோதியதில் மினி வேன் கவிழ்ந்தது.
விபத்து நடந்ததையடுத்து அந்த இடத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். மேலும் சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் உதவியோடு மினி வேனில் சிக்கியிருந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் அனிருத்தா (2), பிரியங்கா (28), நான்சி (16) மற்றும் முன்னி தேவி (50) என அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.