திருப்பதியில் தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா
|திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
திருப்பதி
திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு கல்யாணி அணை அருகே உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக திருப்பதி தேவஸ்தானமும், மாநில அரசும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த நிலையில் தேவஸ்தானத்தில் பாதுகாப்பு அதிகாரிகளாக தேர்வு பெற்றவர்களுக்கு நேற்று முன்தினம் பயிற்சி அளிப்பதற்காக போலீஸ் பயிற்சி பள்ளிக்குச் சென்றனர்.
அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பயிற்சிக்குச் சென்ற 4 தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தொற்று பாதித்த 4 பேருக்கு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.