< Back
தேசிய செய்திகள்
லாரி மீது பஸ் மோதி பயங்கர விபத்து - 4 பேர் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

லாரி மீது பஸ் மோதி பயங்கர விபத்து - 4 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
18 May 2023 11:50 AM IST

மத்தியப் பிரதேசத்தில் லாரி மீது ஸ்லீப்பர் பஸ் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.

போபால்,

மத்தியப் பிரதேசத்தில் லாரி மீது ஸ்லீப்பர் பஸ் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

முன்னதாக இன்று அதிகாலையில் ஸ்லீப்பர் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு அகமதாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அதிகாலை 3.30 மணியளவில் ஷாஜாபூர் அருகே வந்த போது லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு உஜ்ஜைனிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும் செய்திகள்