< Back
தேசிய செய்திகள்
குப்பை கொட்ட சென்ற இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 4 சிறுவர்கள்...
தேசிய செய்திகள்

குப்பை கொட்ட சென்ற இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 4 சிறுவர்கள்...

தினத்தந்தி
|
25 Feb 2024 3:43 PM IST

குப்பை கொட்ட சென்ற இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 4 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு,

பெங்களூரு ஆடுகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 18-ந் தேதி அன்று நள்ளிரவில் அந்த இளம்பெண் தனது வீட்டில் இருந்த குப்பை கழிவுகளை சேகரித்துக் கொண்டு அதை வீச, குப்பை தொட்டி வைக்கப்பட்ட இடத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் அங்குள்ள ஒரு ஆட்டோ நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது 4 பேர் ஒரு ஆட்டோவில் அங்கு வந்தனர். அந்த 4 பேரும் 18 வயது நிரம்பாத சிறுவர்கள்.

சற்றும் எதிர்பாராத நிலையில், இளம்பெண்ணிடம் 4 சிறுவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சலிட்டார். அப்போது அந்த இளம்பெண்ணை 4 சிறுவர்களும் சேர்ந்து கொடூரமாக தாக்கினர். இந்த சந்தர்ப்பத்தில் இளம்பெண், அதே பகுதியில் வசித்து வரும் தனது தோழியை உதவிக்கு அழைத்தார். அதன்பேரில் அங்கு வந்த இளம்பெண்ணின் தோழி அவரை மீட்க முயன்றார். அப்போது அந்த 4 சிறுவர்களும், அந்த பெண் மீதும் தாக்குதல் நடத்தினர். இதில் 2 பெண்களும் பலத்த காயம் அடைந்தனர்.

பின்னர் அந்த சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து அந்த இளம்பெண்கள் வீடு திரும்பினர். அவர்களின் நிலையைக் கண்டு அவர்களுடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து 2 பேரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து ஆடுகோடி போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 4 சிறுவர்களையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்