அருணாச்சல பிரதேசம்: பா.ஜ.க.,வில் இணைந்த 4 எம்.எல்.ஏ.,க்கள்
|அருணாச்சல பிரதேசத்தில் நடப்பாண்டிலேயே சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இட்டாநகர்,
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் முதல்-மந்திரி பிமா காண்டு தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2019 பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. 41 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது.
மேலும் மாநிலத்தில் நடப்பாண்டிலேயே சட்டப்பேரவை மற்றும் மக்களவைக்கும் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த தலா இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் என மொத்தம் 4 பேர் இன்று பா.ஜ.க.,வில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பிமா காண்டு, மாநில பா.ஜ.க. தலைவர் பியூராம் வாகே ஆகியோர் கலந்து கொண்டனர். மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 4 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.க.,வில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் 56 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைக்கும் என்று கூறப்படுகிறது.