< Back
தேசிய செய்திகள்
திருட்டு வழக்குகளில் 4 பேர் கைது;  ரூ.7¼ லட்சம் நகைகள், வாகனங்கள் மீட்பு
தேசிய செய்திகள்

திருட்டு வழக்குகளில் 4 பேர் கைது; ரூ.7¼ லட்சம் நகைகள், வாகனங்கள் மீட்பு

தினத்தந்தி
|
14 Jun 2022 4:06 PM GMT

திருட்டு வழக்குகளில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.7¼ லட்சம் நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டது.

பெங்களூரு: பெங்களூரு பானசாவடி போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளை குறிவைத்து தங்கநகைகள், பணத்தை திருடி வந்த வாலிபர் ஒருவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் கே.ஆர்.புரம் அருகே தேவசந்திரா பகுதியில் வசித்து வரும் ரபீக் (வயது 26) என்பது தெரியவந்தது. இவரிடம் இருந்து ரூ.3.80 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுபோல பெங்களூரு கோவிந்தராஜ்நகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது 3 பேரும் கள்ளச்சாவியை பயன்படுத்தி இருசக்கர வாகனங்களை திருடி விற்றது தெரியவந்தது. இதனால் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.3½ லட்சம் மதிப்பிலான ஒரு மோட்டார் சைக்கிள், 4 ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கைதான 4 பேர் மீதும் பானசாவடி, கோவிந்தராஜ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்