< Back
தேசிய செய்திகள்
காஷ்மீர்: விமானப்படை வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 4 வீரர்கள் படுகாயம்
தேசிய செய்திகள்

காஷ்மீர்: விமானப்படை வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 4 வீரர்கள் படுகாயம்

தினத்தந்தி
|
4 May 2024 8:17 PM IST

காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள விமானப்படை தளத்திற்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு விமானப்படைக்கு சொந்தமான வாகனம் சென்றுகொண்டிருந்தது. மலைப்பாங்கான சூரங்கோட் என்ற பகுதியில் சென்றபோது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் விமானப்படை வீரர்களை ஏற்றி வந்த வாகனத்தை குறிவைத்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் விமானப்படை வீரர்கள் 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலையடுத்து விரைந்து வந்த ராணுவம், பாதுகாப்புப்படையினர், போலீசார் அப்பகுதியை சுற்றிவளைத்து தப்பியோடிய பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், படுகாயமடைந்த விமானப்படை வீரர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்