< Back
தேசிய செய்திகள்
மின்னல் தாக்கி ஒரே நாளில் 38 பேர் பலி
தேசிய செய்திகள்

உ.பி.யில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 38 பேர் பலி

தினத்தந்தி
|
11 July 2024 9:57 PM IST

உத்தர பிரதேசத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் கனமழை பெய்துவரும் நிலையில், மாநிலத்தில் வெவ்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கிய சம்பவத்தில் ஒரே நாளில்38 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக பிரதாப்கர் மாவட்டத்தில் 11 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கனமழையின்போது நிலத்தில் வேலை செய்தவர்களும், மழைக்கு மரத்தின் கீழ் ஒதுங்கியவர்களும் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, உத்தரப் பிரதேசம் மற்றும் அதன் அருகிலுள்ள யூனியன் பிரதேசங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும் செய்திகள்