< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்
|16 Jan 2024 9:57 AM IST
இன்று காலை 8.53 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர்,
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 8.53 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகாத நிலையில், நிலநடுக்கம் காரணமாக அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.